டான்சி வழக்கு - ஒரு கண்ணோட்டம்
சென்னை:
கடந்த அதிமுக ஆட்சியின்போது, டான்சி நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துக்களை அப்போதைய முதல்வராகஇருந்த ஜெயலலிதா குறைந்த விலைக்கு விற்பதற்கு அனுமதித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது.
1996ல் ஆட்சிக்கு வந்த திமுக தனி நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தது. முதல்வராக இருந்தஜெயலலிதாவுடன் அவருடைய தோழி சசிகலாவும் பங்குதாரராக இருந்த ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் சசிஎன்டர்பிரைசஸ் ஆகிய இரு நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சென்னை 3வது தனி நீதிமன்ற நீதிபதி பி. அன்பழகன் இந்த வழக்கை விசாரித்தார். அவர் தன்னுடைய தீர்ப்பில்ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல் முறையீடு செய்ததைத் தொடர்ந்து, அவருக்குஅளிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
இருந்த போதிலும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை காரணமாக கடந்த மே மாதம் நடந்த தமிழகசட்டசபைத் தேர்தலில் அவர் போட்டியிட முடியாமல் போனது. ஆனாலும் அதிமுக அமோக வெற்றிபெற்றதையடுத்து, அவர் தமிழக முதல்வரானார்.
இதற்கிடையே டான்சி வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா முதல்வராகத் தொடர்ந்து பதவி வகிக்க முடியாதுஎன்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 21ம் தேதி தீர்ப்பளித்தது. இதையடுத்து, அவர் முதல்வர் பதவியையும்துறக்க நேரிட்டது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி தினகர், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா உள்பட அனைவரையும் விடுதலை செய்து இன்று தீர்ப்பளித்தது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications