அரிசி விலை உயர்வு: திருச்சியில் பெண்கள் சாலை மறியல் - போலீஸ் தடியடி
திருச்சி:
ரேஷன் அரிசி விலை உயர்வைக் கண்டித்து திருச்சியில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள்கலைந்து செல்லாததையடுத்து, போலீசார் மேற்கொண்ட தடியடியில் பல பெண்கள் காயமடைந்தனர்.
நிதிநெருக்கடியைச் சீர் செய்வதற்காக பஸ் கட்டணம், மின் கட்டணம், பால் விலை, அரிசி விலை போன்றஅத்தியாவசியப் பொருட்மகளின் விலையைத் தமிழக அரசு உயர்த்தியுள்ளது. கடந்த 1ம் தேதி முதல் இந்த விலைஉயர்வு அமலுக்கு வந்துள்ளது.
ஒரு கிலோ அரிசியின் விலை வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கு ரூ.3.50 என்றும் வறுமைக்கோட்டிற்குமேல் உள்ளவர்களுக்கு ரூ.9.00 என்றும் அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது.
இதை எதிர்த்து நேற்று (திங்கள்கிழமை) கோவை, மதுரை, நெல்லை ஆகிய நகரங்களில் பெண்கள் ஆர்ப்பாட்டம்நடத்தினர்.
இதைத் தொடர்ந்து இன்று திருச்சியிலும் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடத்தப்பட்டது.
திருச்சி அருகே உள்ள அரியமங்கலத்தில் இன்று பெண்கள் அனைவரும் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் சாலையில் வெகு நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அப்பகுதி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பெண்களைக் கலைந்துசெல்லும்படி கேட்டுக் கொண்டனர்.
ஆனால் அதற்குப் பெண்கள் மறுக்கவே, போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் பல பெண்களுக்குகாயம் ஏற்பட்டது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications