சென்னையில் பிரம்மாண்ட கடை அமைத்து ரூ.1 கோடி மதிப்பு பொருட்கள் மோசடி
சென்னை:
சென்னையில் பிரம்மாண்டமான கடை ஒன்றை அமைத்த சில வட நாட்டினர் ரூ.1 கோடி மதிப்புள்ளபொருட்களுடன் தலைமறைவாகினர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு வணிக வளாகத்தில் சில நாட்களுக்கு முன் வட இந்தியாவைச் சேர்ந்த சிலர்பெரிய கடை ஒன்றைத் திறந்தனர்.
இந்தக் கடைக்கு மொத்தம் 11 பார்ட்னர்களாம். ஜோஷி என்பவர்தான் இவர்களுக்குத் தலைவராம்.
பெரிய கடையாகத் திறந்திருக்கிறார்களே என்று இக்கடைக்கு பலர் முன் பணம் வாங்காமலேயே ஏகப்பட்டபொருட்களை விநியோத்துள்ளனர்.
இதற்கிடையே இக்கடையில் விற்பனை நிபுணர்கள் வேலைக்காக விண்ணப்பம் கோரி செய்தித் தாள்களிலும்விளம்பரம் வெளியாகியது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.7,500 மாதச் சம்பளம் வழங்கப்படும் என்றும்கூறப்பட்டது.
இதை நம்பி ஏராளமான இளைஞர்கள் இங்கு வந்து நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு, சிலர் வேலைக்கும்சேர்ந்து விட்டனர். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக இவர்களுக்குச் சம்பளம் கொடுக்காமல் கடை முதலாளிகள்(அந்த 11 பார்ட்னர்கள்தான்) இழுத்தடித்தனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்காளாக அந்தக் கடை பூட்டியே கிடந்தது. சந்தேகமடைந்த சிலர் போலீசாருக்குத்தகவல் கொடுத்தனர்.
போலீசார் முன்னிலையில் கடையின் பூட்டு உடைக்கப்பட்டது. கடைக்குள் நுழைந்த போலீசாரும் மற்றவர்களும்பெரும் அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால், அங்கு ஒரு பொருள் கூட இல்லை.
இரவோடு இரவாக பொருட்களையெல்லாம் அள்ளிக் கொண்டு, ஜோஷி உள்பட 11 பார்ட்னர்களும்தலைமறைவாகி விட்டனர். இக்கடையில் வேலை பார்த்த இளைஞர்களும், முன் பணம் பெறாமல் பொருட்களைஅள்ளிக் கொடுத்தவர்களும் பரிதாபமாக முழித்துக் கொண்டிருக்கின்றனர்.
தலைமறைவான 11 பேருக்கும் போலீசார் வலை விரித்துள்ளனர்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications