மீண்டும் ஜெ. முதல்வராக தடை இல்லை: சட்ட நிபுணர்கள் கருத்து
புதுடில்லி:
டான்சி மற்றும் ப்ளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஜெயலலிதா மீண்டும்முதல்வராக தடை ஏதும் இல்லை என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 8(3)ன்படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில்போட்டியிடும் தகுதியை இழக்கின்றனர்.
இந்த சட்டத்தின்படி நடந்து முடிந்த தேர்தலில் ஜெயலலிதாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. ஆனால் அதிமுகவெற்றியடைந்ததால், அவர் முதல்வராக பதவி ஏற்றார்.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அவர் முதல்வராகப் பதவி ஏற்றது செல்லாதுஎன்று கூறி பதவி இறக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் மீதான இரண்டு வழக்குகளிலும் நேற்று விடுதலை அளித்து தீர்ப்பளிக்கப்பட்டது.இதனால் அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்பது குறித்து சட்டநிபுணர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
பிரபல அரசியலமைப்பு சட்டநிபுணரும், ராஜ்யசபா உறுப்பினருமான பாலி எஸ்.நரிமன் கூறுகையில்,ஜெயலலிதாவுக்கு எந்த தண்டனையும் இல்லாத பட்சத்தில் அவர் மீண்டும் முதல்வராக தடை ஏதுமில்லை என்றார்.
எம்.எல்.ஏவாகவோ, எம்.பியாகவோ இல்லாத ஒருவர் 6 மாத காலத்திற்கு மீண்டும் முதல்வராக முடியாது என்றுஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது குறித்து கேட்டபோது,ஜெயலலிதா முதல்வராகும் விஷயத்தில் இந்த உத்தரவு அவருக்கு தடையாக இருக்காது என்று நரிமன் கருத்துதெரிவித்தார்.
மூத்த வக்கீலும்,ராஜ்யசபா எம்.பி.யுமான கபில் சிபல், குற்ற சதி என்ற குற்றச்சாட்டின் மூலம் அரசியல்வாதிகளைநீதிமன்றத்துக்கு இழுப்பது தற்போது சகஜமாகி விட்டது என்று கூறினார்.
மேலும் ஜெயலலிதாவுக்கு நெருக்கமான வழக்கறிஞர்கள், ஜெயலலிதாவின் மீது எந்த தண்டனையும் இல்லாததால்அவர் இப்பொழுதே முதல்வராக பதவியேற்றால் அது சட்டப்படி செல்லும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications