காரைக்குடி நகராட்சி மன்றத்தில் ஜெ. படம்: கூச்சல்-குழப்பம்

Subscribe to Oneindia Tamil

காரைக்குடி:

காரைக்குடி நகராட்சி மன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் வைத்ததற்கு எதிர்க் கட்சியினர்எதிர்ப்புத் தெரிவித்ததால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் நகரலாட்சித் தலைவி சுமதிசொக்கலிங்கத்தின் இருக்கைக்கு நேராக மேலே,முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை, அதிமுகவினர் வைத்தனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த எதிர்க் கட்சி உறுப்பினர்கள் சிலர், அந்தப் படத்தை நீக்க முயன்றனர். இதனால்அவையில் அதிமுகவினருக்கும், திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பிறகு போலீசார் தலையிட்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகிய இரு தலைவர்களின்படங்களும் இடம்பெறட்டும் என்று கூறி பிரச்சனையைத் தீர்த்து வைத்தனர்.

இந்தப் பிரச்சனையால் சபை நடவடிக்கைகள் வெகு நேரம் பதிக்கப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+