கட்டண, விலை உயர்வுகள்: தமிழகம் முழுவதும் பாமக போராட்டம்
சென்னை:
கட்டண மற்றும் விலைவாசி உயர்வுகளைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று(புதன்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நிதி நெருக்கடியைச் சீர்செய்வதற்காக பஸ் கட்டணம், மின் கட்டணம், அரிசி விலை, பால் விலை உள்ளிட்டஅத்தியாவசியப் பொருட்களின் விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இந்த விலையேற்றம் கடந்த 1ம் தேதிமுதல் அமலுக்கு வந்துள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. வரும் 7ம் தேதிஎதிர்க்கட்சிகள் தமிழகத்தில் பந்த் நடத்தவுள்ளன.
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும்,மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
சென்னையில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையில், பாரிமுனையிலிருந்து மாவட்டக் கலெக்டர் அலுவலகம்வரை பாமகவினர் ஊர்வலமாகச் சென்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அனவைரும் அதிமுக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
செங்கல்பட்டு எம்.பியான ஏ.கே. மூர்த்தி உள்ளிட்ட பாமக தொண்டர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
உடனடியாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறைக்கப்படாவிட்டால் போராட்டத்தைதீவிரப்படுத்தப் போவதாக மணி அப்போது தெரிவித்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications