ரேஷன் கடைகளைப் பூட்டிய பொதுமக்கள்
வேலூர்:
வேலூரில் ரேஷன் பொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 5 ரேஷன் கடைகளை பொதுமக்களே மூடி சீல் வைத்தனர்.இதனால் வேலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரேஷன் மூலம் வழங்கப்படும் அரிசி, மண்ணெண்ணை மற்றும் சர்க்கரையின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதில் வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கும் கூடுதல் விலையில் அரிசி விற்கப்படுகிறது, அவர்களுக்கு மண்ணெண்ணை மற்றும்சர்க்கரை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் ரேஷன் பொருள் விலை உயர்வைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம்நடத்தி வருகின்றனர். இந் நிலையில் இன்று வேலூரில் 5 ரேஷன் கடைகளை பொதுமக்கள் இழுத்து மூடினர். இதனால் அங்குபரபரப்பு ஏற்பட்டது.
பழனிஆசாரி தெரு, சலவன்பேட், லட்சுமிபுரம், கச்சேரி தெரு மற்றும் இடத் தெரு ஆகிய இடங்களில் உள்ள ரேஷன் கடைகள் முன்புதன்கிழமை காலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அங்கிருந்த ரேஷன் கடைஊழியர்களை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினர். அதன் பிறகு கடையை இழுத்து மூடினர்.
செய்தி அறிந்ததும் மாவட்ட ணவு வழங்கல் அதிகாரி விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தார். ஆனால் பொதுமக்கள்,குறிப்பாக பெண்கள் மசியவில்லை. அந்த அதிகாரிக்கு சரமாறியாக திட்டு விழுந்தது.
வேலூர் தொகுதி எம்.எல்.ஏ. ஞானசேகரனும் அங்கு வந்தார். அவரைப் பார்த்த பொதுமக்கள் ஆவேசத்துடன் கோஷமிட்டனர்.இதையடுத்து அவர்களை எம்.எல்.ஏ. அமைதிப்படுத்த முயன்று தோற்றார்.
மாலை வரை அங்கு ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications