டான்சி நிலம் அரசு நிலமே அல்ல - நீதிபதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டான்சி சிலம் அரசு நிலமே அல்ல என்றும், அரசு ஊழியர் அரசு சொத்தை வாங்கக் கூடாது என்று சட்டத்தில் எங்கும்கூறப்படவில்லை என்றும் நீதிபதி தினகர் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

டான்சி வழக்கை விசாரித்த தனிநீதிமன்ற நீதிபதி , வழக்கின் இறுதியில் வழிகாட்டி மதிப்பீட்டிற்கு பதில், சந்தைமதிப்பீட்டை எடுத்துக் கொண்டு தீர்ப்பளித்திருப்பதன் மூலம், குற்றம்சாட்டப்பட்டவர்கள் பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நிலத்தை வாங்கியதற்கான கிரயப்பத்திரத்தில் உள்ள கையெழுத்து தன்னுடையதல்ல என்று ஜெயலலிதாகூறியுள்ளார். அதை நிரூபிக்க அவரது கையெழுத்தை, கையெழுத்து நிபுணர்களுக்கு அனுப்பவில்லை. மேலும்,சாட்சியளித்தவர்களும், ஜெயலலிதா தங்கள் முன்பு கையெழுத்திடவில்லை என்று கூறியுள்ளனர்.

வழிகாட்டி மதிப்பீட்டை விடவோ, சந்தை மதிப்பீட்டை விடவோ குறைவாக நிலம் வாங்கப்படாததால், அவரேகையெழுத்திட்டிருந்தாலும், அதன் மூலம் அவர் குற்றச் சதியில் ஈடுபட்டுள்ளார் என்று கூறிவிட முடியாது.

டான்சி நிறுவனம் அரசு நிறுவனம் அல்ல. அதனால், ஜெயலலிதா, அரசு சொத்தை வாங்கினார் என்ற கேள்விக்கேஇடம் இல்லை.

மேலும் அரசு ஊழியர்கள், அரசு சொத்தை வாங்கக் கூடாது என்று சட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை.

இவ்வாறு நீதிபதி தினகர் தன் தீர்ப்பில் கூறியுள்ளார். டான்சி வழக்குக்கு மட்டும் 369 பக்கங்களில் தீர்ப்புஎழுதப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+