25 வழக்குகளில் தொடர்புடைய திருடன் அதிரடி கைது
சென்னை:
போலீசாரின் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்த பலே திருடனை போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
செங்கை கிழக்கு மாவட்டம் சங்கர் நகரைச் சேர்ந்தவர் காட்டுப்பூச்சி. இவர் மீது செங்கை கிழக்கு, காஞ்சிபுரம் ஆகியமாவட்டங்களில் கொள்ளை, வழிப்பறி, பிக் பாக்கெட் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
கொள்ளையில் பல வருட அனுபவம் நிறைந்த காட்டுப்பூச்சியை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு போலீசார் கைதுசெய்தனர்.
கைது செய்யப்பட்ட காட்டுப்பூச்சியை ஒரு வழக்கு தொடர்பாக காஞ்சிபுரம் நீதிமன்றத்திற்கு அழைத்துச்சென்றபோது போலீசாரை ஏமாற்றி விட்டு எஸ்கேப் ஆனார் காட்டுப்பூச்சி. அதற்குப் பிறகு அவர் எங்குமேசிக்கவில்லை.
இதன் பிறகு, சங்கர் நகர் திருட்டில் ஈடுபட முயன்ற காட்டுப்பூச்சியை போலீசார் பிடித்தனர். அவரை தாம்பரம்கோர்ட்டிற்கு கொண்டு சென்றனர். அப்போதும் வழக்கம் போலவே போலீசாரை ஏமாற்றி விட்டு தப்பினார்காட்டுப்பூச்சி.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சங்கர் நகர் பகுதியில் சாலையில் சென்ற பெண்களிடம் காட்டுப்பூச்சி தகராறுசெய்து கொண்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து பெரும் போலீஸ் படையே அங்கே விரைந்தது. இந்த முறை காட்டுப்பூச்சியை தப்ப விடக் கூடாதுஎன்ற உறுதியுடன் வந்த போலீசார், குடி போதையில் பெண்களிடம் வம்பு செய்து கொண்டிருந்த காட்டுப்பூச்சியைமடக்கிப் பிடித்தனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications