பண்ருட்டி சம்பவம்: சாராய வியாபாரி பெங்களூரில் கைது

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

பண்ருட்டி அருகே விஷச்சாராயம் குடித்ததால் 50க்கும் மேற்பட்டோர் பலியானதற்குக் காரணமான சாராயவியாபாரிகளில் ஒருவர் பெங்களூரில் நேற்று கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நத்தம் மற்றும் அருங்குணம் கிராமங்களில் சமீபத்தில் விஷச் சாராயம் குடித்த53 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் பலருக்கு கண்பார்வை பறிபோனது.

இந்த விஷச் சாராய சாவுகளுக்குக் காரணமான வியாபாரிகளில் ஒருவரான சேகர் என்பவர், பெங்களூரில் உள்ளராஜகோபால் நகரில் தலைமறைவாக இருந்து வந்தார்.

இவருடன் இவரது மாமனாரும் மற்றொரு சாராய வியாபாரியுமான மொட்டக்காளை என்பவரும் தங்கியிருந்தார்.

ராஜகோபால் நகர் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால், இங்கு இருப்பது ஆபத்து என்று கருதி இருவரும்பாண்டிச்சேரிக்குச் செல்லத் திட்டமிட்டனர்.

ஆனால் மட்டக்காளை மட்டும் பாண்டிச்சேரிக்குச் சென்றார். பிறகு அவர் போலீசுக்குப் பயந்துஉளுந்தூர்பேட்டையில் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் பெங்களூரில் சேகர் தலைமறைவாக இருப்பது குறித்து தமிழக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.இதையடுத்து, சேகர் இங்கு ஒளிந்துகொண்டிருப்பது பற்றி பெங்களூர் சிவாஜி நகர் போலீசாருக்கு தமிழக போலீசார்தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து கலாசிபாளையம் சாராயக்கடை அருகே நின்று கொண்டிருந்த சேகரை, சிவாஜிநகர் இன்ஸ்பெக்டர்உமேஷ் கைது செய்தார்.

கைது செய்யப்பட்ட சேகர், நேற்று தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+