சூப்பர் மார்க்கெட் மோசடி: டெல்லி விரைந்தது சென்னை போலீஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் சூப்பர் மார்க்கெட் நடத்துவதாக கூறி பல கோடி மோசடி செய்த கும்பலைத் தேடி சென்னை போலீஸ்குழு டெல்லி மற்றும் சண்டீகர் நகருக்குச் சென்றுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ்.கே. சூப்பர் மார்ட் என்ற பெயரில் புதிய வணிக வளாகம் துவக்கப்பட்டது. இதற்குபல விற்பனை நிறுவனங்கள் முன் பணம் வாங்கமலேயே பொருட்களை சப்ளை செய்தன.
சப்ளைக்குப் பிறகு பணம் வராத காரணத்தால் அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் வணிக வளாகத்திற்குவந்தபோதுதான் அவர்கள் மோசடி செய்யப்பட்டது தெரிய வந்தது.
பொருட்கள் அனைத்தையும் சூப்பர் மார்க்கெட்டை நடத்தி வந்தவர்கள் எடுத்துக் கொண்டு தப்பிவிட்டனர்.
இதுகுறித்து 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களைத் தேடி டெல்லி மற்றும்சண்டீகருக்கு சென்னை போலீஸ் படை விரைந்துள்ளது.












Click it and Unblock the Notifications