தமிழர்கள் வாக்களிக்கத் தடை: ஐரோப்பிய யூனியன் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
வவுனியாவில் தமிழர்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததற்கு ஐரோப்பிய நாடுகளின் தேர்தல் பார்வையாளர்கள்கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நேற்று நடந்த வாக்குப் பதிவின்போது தமிழர்கள் வசிக்கும் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில்வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவில்லை. இந்தப் பகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதால்வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவில்லை என ராணுவம் கூறியது.
ஆனால், ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் இந்தத் தமிழர்கள்வந்து வாக்களிக்கவும் அனுமதிக்கப்படவில்லை. தமிழர்கள் வரும் வழிகளை ராணுவம் அடைத்துவிட்டது.வாக்களிக்க வந்த தமிழர்களை விரட்டி அடித்தது.
இதற்கு ஐரோப்பிய யூனியன் பார்வையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications