இலங்கை தேர்தல்: எதிர்க் கட்சி முன்னணி
கொழும்பு:
இலங்கையில் நேற்று (புதன்கிழமை) நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய முக்கிய எதிர்க் கட்சியானஐக்கிய தேசிய கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னணியில் உள்ளது.
பாதுல்லா, மட்டாலே, நுவாரா, எலியா உள்பட பல மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணிவேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். திரிகோணமலை, புத்தளம், மத்தாரா, ஹம்பன்தோடா ஆகியமாவட்டங்களில் இக்கட்சி முன்னணியில் உள்ளது.
இதற்கிடையே அனுராதபுரம், களத்துறை, காலே, திகமாதுல்லா, பொலன்னருவா போன்ற மாவட்டங்களில் ஆளும்ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் உள்ளது.
தமிழ்க் கட்சிகளும் முன்னிலை:
இந்நிலையில் யாழ்ப்பாணம், வன்னி, வல்வெட்டித் துறை போன்ற பகுதிகளில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி(டி.யூ.எல்.எப்.) முன்னிலையில் உள்ளது.
இதேபோல் மற்ற தமிழ்க் கட்சிகளும் பல இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன.
தேர்தல் வன்முறையில் 18 பேர் பலி
இதற்கிடையே நேற்று நடந்த தேர்தலின்போது ஏற்பட்ட வன்முறையில் 18 பேர் கொல்லப்பட்டதாகக்கூறப்படுகிறது.
மேலும் இலங்கையின் வடக்குப் பகுதியில் லட்சக்கணக்கான தமிழர்கள் வாக்களிக்க முடியவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications