உயர்த்தப்பட்ட மின்கட்டணம் குறைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

யூனிட்டுக்கு ஒரு ரூபாய் என்று உயர்த்தி அறிவிக்கப்பட்ட மின்கட்டணம் சற்று குறைக்கப்பட்டு, யூனிட்டுக்கு 85காசுகள் என்று திருத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

சமீபத்தில் நிதிப் பற்றாக்குறையைச் சுட்டிக்காட்டி, பஸ் கட்டணம், மின் கட்டணம், பால் விலை, அரிசி விலைஉள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. இந்த விலை உயர்வுகடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இந்நிலையில் மின் கட்டணம் உட்பட உயர்த்தப்பட்ட அனைத்துக் கட்டணங்களும் சற்று குறைக்கப்பட்டுள்ளன.

மின் கட்டணத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:

யூனிட்டுக்கு 75 பைசா என்றிருந்த வீட்டு உபயோக மின் கட்டணம், சமீபத்தில் ஒரு ரூபாயாக உயர்த்தப்பட்டது.

ஆனால் 25 முதல் 50 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்குவிதிக்கப்பப்படும் மின்கட்டணம் அவர்களைப் பாதிக்காதவகையில் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்றுஜெயலலதா தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்த ஆலோசனையின் அடிப்படையில் மின்கட்டணங்கள் (ஒரு யூனிட்டுக்கு) குறைக்கப்பட்டு, திருத்திஅமைக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:

  • 25 யூனிட் வரை 85 பைசா
  • 26 முதல் 50 யூனிட் வரை 100 பைசா
  • 51 முதல் 100 யூனிட் வரை 200 பைசா
  • 101 முதல் 300 யூனிட் வரை 300 பைசா
  • 301 முதல் 500 யூனிட் வரை 400 பைசா
  • 501 க்கு மைல் 450 பைசா
திருத்தப்பட்ட கட்டணங்கள் டிசம்பர் 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும். இவ்வாறு அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது. Mail this to a friend  Post your feedback  Print this page 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+