விலை குறைப்பா? கண்துடைப்பா?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கடந்த 1ம் தேதி மின்சார, பஸ், ரேஷன் பொருள்களின் கட்டணத்தையும் விலைகளையும் மிகக் கடுமையாகஉயர்த்திய அரசு மக்களின் போராட்டத்துக்கு பணிந்து ஆறே நாட்களில் விலைகளைக் குறைப்பதாகஅறிவித்துள்ளது.
ஆனால், உயர்த்தப்பட்ட அளவில் இருந்து மிகக் குறைவான அளவிலேயே விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
ரேஷன் அரிசியின் விலையைப் பொருத்தவரை பழைய விலையான ரூ.3.50க்கே அரிசி வழங்கப்படும் என அரசுஅறிவித்துள்ளது.
ஆனால், பஸ் கட்டணத்திலும் மின் கட்டணத்திலும் அதிகப்படியான அளவில் விலை குறைப்பு செய்யப்படவில்லை.
அதே போல அரசு ஊழியர்களுக்கு ரத்து செய்யப்பட்ட பல சலுகைகளும் திரும்பத் தரப்பட்டுள்ளன.
இந்த விலைக் குறைப்பு திமுக தலைவர் கருணாநிதி கூறியது போல கண்துடைப்பாகத் தான் தெரிகிறது.












Click it and Unblock the Notifications