பாபர் மசூதி இடிப்பு தினம்: முஸ்லீம் அமைப்புகள் பேரணி
சென்னை:
பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று (வியாழக்கிழமை) தமிழகத்தில் பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் அமைதிப்பேரணி நடத்தின. தமிழகம் முழுவதிலும் அமைதி நிலவுகிறது.
டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம்முழுவதிலும் தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) உள்ளிட்ட பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் சார்பில்அமைதி பேரணிகள், ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
சென்னையில் சுமார் 7,000 தமுமுக தொண்டர்கள் அமைதிப் பேரணி மேற்கொண்டனர். பேரணி முடிந்ததும்அவர்கள் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் இச்சம்பவத்திற்குக் காரணமாக சங் பரிவார் தொண்டர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் அந்தஇயக்கத்தையே தடை செய்ய வேண்டும் என்றும் தமுமுக தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் இதுகுறித்து ஜனாதிபதிக்குச் செல்ல வேண்டிய மனு ஒன்றை சென்னை கலெக்டர் அலுவலகத்தில் தமுமுகதொண்டர்கள் சமர்ப்பித்தனர்.
கோயம்புத்தூரில் 70 பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தமுமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.
அயோத்தியில் பாபர் மசூதிக்கு அருகில் தற்போது நடந்துவரும் ராமர் கோவில் கட்டுமானப் பணிகளைஉடனடியாகத் தடுக்க வேண்டும் என்றும் மசூதியைத் திரும்பவும் கட்டித்தர வேண்டும் என்றும் தமுமுகதொண்டர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
பின்னர் இது தொடர்பான மனு ஒன்றையும் அவர்கள் கோயம்புத்தூர் கலெக்டரிடம் சமர்ப்பித்தனர்.
தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுவரை எந்தப்பகுதியிலும் அசம்பாவிதச் சம்பங்கள் நடந்ததாக போலீசாருக்குத் தகவல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications