ஜெ.க்கு எதிராக பொது வேட்பாளர்: ராமதாஸ் யோசனை
சென்னை:
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகள் சார்பாக பொது வேட்பாளர்நிறுத்தப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் யோசனைதெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பொடோ சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பு அனைத்துக் கட்சிகளின் ஆதரவைப் பெறவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பிரதமர் வாஜ்பாய்க்குக் கோரிக்கை விடுத்துள்ளேன்.
மலிவு விலை மதுவை தமிழகத்தில் அறிமுகப்படுத்த அதிமுக அரசு முடிவு செய்துள்ளது. பூரண மதுவிலக்கு என்றகொள்கையிலிருந்து அதிமுக அரசு தடம் புரண்டிருப்பதையே இது காட்டுகிறது.
மலிவு விலை மதுவை அறிமுகப்படுத்துவதன் மூலம் அந்த மலிவு விலை பாக்கெட்டுகளை விற்பனை செய்யப்போகும் ஆந்திராவுக்குத்தான் வருவாய் கிடைக்கும். மாறாக, தமிழ்நாட்டில் உள்ள பனை மற்றும் தென்னை மரம்மூலம் கள் இறக்கிப் பிழைக்கும் ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
தமிழக அரசின் கட்டண உயர்வைக் கண்டித்து 3 கட்டமாக போராட்டத்தை நடத்த பாமக முடிவு செய்துள்ளது.
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்படவேண்டும்.
அப்போதுதான் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறாமல் இருக்கும். இதன் மூலம் ஜெயலலிதாவை தோற்கடிக்கமுடியும் என்றார் ராமதாஸ்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications