இலங்கை: ரணில் விக்கிரமசிங்கே கட்சி அபார வெற்றி
கொழும்பு:
இலங்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் மக்கள் கூட்டணி மிகப்பெரும் தோல்வியடைந்துள்ளது.
இதில் கிட்டத்தட்ட 50 சதவீத வாக்குகள் ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சிக்கே கிடைத்துள்ளன.இந்தக் கட்சிக்கு 113 முதல் 115 இடங்கள் வரை கிடைக்கும் என்று தெரிகிறது. ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 113இடங்கள் தேவை.
தமிழர் பகுதிகளில் சந்திரிகாவின் கட்சிக்கு மிகப் பெரிய தோல்வி கிடைத்துள்ளது. இந்தப் பகுதிகளில் தமிழர்விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் பல இடங்களில் வென்றுள்ளன. இந்தக் கூட்டணியை உருவாக்கியதுவிடுதலைப் புலிகள் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இக் கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துதேர்தலில் போட்டியிட்டது.
113 இடங்கள் கிடைக்காவிட்டால், தமிழர் கட்சிகளுடன் இணைந்து ரணில் விக்கிரமசிங்கே ஆட்சி அமைப்பார்.
இந்தத் தேர்தல் முடிவுகளால் சந்திரிகாவுக்கு மாபெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவரது கட்சிக்கு 80 இடங்கள்வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனதா விமுக்தி பெரமுனா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன. இக்கட்சிகள் சந்திரிகாவை ஆதரிக்கின்றன.
ரணில் விக்கிரமசிங்கே பிரதமரானாலும் கூட அவர் சந்திரிகாவின் கீழ் தான் பணியாற்றியாக வேண்டும்.சந்திரிகாவின் அதிபர் பதவிக் காலம் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகளாகும். இதனால், நாட்டில் அரசியல்மோதல்கள் பெருமளவில் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆட்சிக்கு வந்தால் உடனடியாக விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ரணில் விக்கிரமசிங்கேஅறிவித்துள்ளார்.
நேற்றைய தேர்தலில் 75 சதவீதம் வாக்குப் பதிவு இருந்தது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications