சிறையில் போலீசாரால் கற்பழிக்கப்பட்ட இளம்பெண்: சிறப்பு விசாரணைக்கு உத்தரவு
சென்னை:
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண்ணான ரீட்டா சிறைத்துறைப் போலீசாரால் கற்பழிக்கப்பட்டதுதொடர்பாக விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவொற்றியூரைச் சேர்ந்த ரீட்டா என்ற இளம்பெண்ணை, கடந்த மாதம் 20ம் தேதி முருகேசன் என்பவர் கடத்திச்சென்று, திண்டிவனத்தில் உள்ள ஒரு விபச்சார விடுதியில் விற்றுள்ளார். அந்த விடுதியில் இருந்து ரீட்டாவை சிலஇளைஞர்கள் மீட்டு திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஆனால், இந்தப் பெண்ணை விபச்சாரி என பட்டம் சூட்டி செஞ்சி சிறையில் போலீசார் அடைத்தனர்.
பின்னர் சிறையில் வைத்து அந்தப் பெண்ணை பல சிறைத்துறைப் போலீசார் கற்பழித்துள்ளனர்.
இதுகுறித்துத் தகவல் அறிந்த சில தன்னார்வ அமைப்புகள், கற்பழிப்பில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கைஎடுக்கக் கோரியும், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.தினகரன், இச்சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல்செய்யும்படி அனைத்து மகளிர் போலீஸ் ஐ.ஜி.திலகவதிக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து இச்சம்பவம் குறித்து நேரில் சென்று விசாரித்து, நேற்று உயர்நீதிமன்றத்தில் ஐ.ஜி.திலகவதி அறிக்கைதாக்கல் செய்தார்.
இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது,
இந்த வழக்கு மேலும் தாமதப்படக்கூடாது என்பதற்காக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. இந்தவழக்கு தொடர்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும், இன்று கோர்ட்டில்அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை திண்டிவனம் ஆர்.டி.ஓ. உடனடியாக சி.பி.சி.ஐ.டி. எஸ்.பிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
மேலும், விசாரணை நடத்தி ஐ.ஜி.திலகவதி தாக்கல் செய்த அறிக்கைகயின் நகல்கள் தலைமைச் செயலாளர்,உள்துறைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு உடனடியாகஅனுப்பிவைக்க வேண்டும்.
அவர்கள் ரீட்டாவுக்கு நிவாரணத் தொகை, மருத்துவ உதவி, குற்றம்சாட்டப்பட்ட போலீசார் மீது நடவடிக்கைபோன்றவை குறித்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி தினகரன் உத்தரவிட்டார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications