ரேஷன் அரிசி ரூ.3.50 க்கே கிடைக்கும்
சென்னை:
ரேஷன் அரிசி வருகின்ற மே மாதம் வரை ரூ.3.50க்கே விற்கப்படும் என்றும் இது இன்று (வியாழக்கிழமை) முதல்அமலுக்கு வருகிறது என்றும் முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
அரிசி விலை உயர்வினால் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பாதிப்படையக்கூடாது என்பதால், தற்போதுஅதன் விலை குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த கருணாநிதி ஆட்சியில் குடும்ப அட்டைகள் வழங்குவதற்காக நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பலகுளறுபடிகளும், முறைகேடுகளும் நடந்துள்ளன. இதனால் ஒரு லட்சத்திற்கும் மேல் வறுமைக்கோட்டிற்கு கீழ்உள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் இத்தகைய குடும்பங்களை இனம் கண்டு பிரிப்பதற்காக, தமிழக அரசு அடுத்த மாதம் 1ம் தேதி முதல்பிப்ரவரி 28ம் தேதி வரை கணக்கெடுப்பு நடத்த உள்ளது.
ஆண்டு வருமானம் ரூ.24,000 வரை சம்பளம் பெறுகின்ற குடும்பங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்என்றும், அதற்கு அதிகமாக சம்பளம் பெறுபவர்கள் வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் என்று பிரிக்கப்படும்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு பச்சை நிறம் கொண்ட குடும்ப அட்டைகளும், மற்றவர்களுக்குநீல நிறம் கொண்ட குடும்ப அட்டைகளும் வழங்கப்படும்.
குடும்ப அட்டைகள் வழங்கப்படும் பணி அடுத்த ஆண்டு மார்ச் 1ம் தேதி தொடங்கி ஏப்ரல் 30ம் தேதிக்குள்முடிவடையும்.
அதுவரை ரேஷன் கடைகளில் அரிசி விலை ரூ.3.50ஆகவே இருக்கும் என்றார் பன்னீர்செல்வம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications