தமிழக ஐக்கிய ஜனதாதளம் கூண்டோடு கலைப்பு - காங்கிரசில் ஐக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் உள்ள சின்னஞ்சிறு கட்சிகளில் ஒன்றான தமிழக ஐக்கிய ஜனதாதளம் கூண்டோடு காலியாகி விட்டது.இக்கட்சியின் தலைவர் பாலசுப்ரமணியம் தனது ஆதரவாளர்களோடு காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகி விட்டார்.

தேசிய அளவில் ஜனதாதளம் சிதறுண்டு பல காலமாகி விட்டது. அதில் ஒரு துண்டுதான் ஐக்கிய ஜனதாதளம். இந்தக்கட்சிக்கு தமிழகத்திலும் கிளை உண்டு. அதன் தலைவராக பாலசுப்ரமணியம் என்பவர் இருந்து வந்தார்.

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் வந்து சேருமாறு அக்கட்சியின் தலைவர் இளங்கோவன் பல கட்சியினருக்கும்அழைப்பு விடுத்திருந்தார் அல்லவா? அதை பரிசீலித்த பாலசுப்ரமணியம், காங்கிரஸில் இணைய முடிவு செய்தார்.

தனது ஆதரவாளர்களோடு ஆலோசனை நடத்திய பின் புதன்கிழமை தனது ஆதரவாளர்களோடு காங்கிரஸில்ஐக்கியமாகி விட்டார்.

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரமேஷ் சென்னிதாலா முன்னிலையில் இந்த இணைப்பு விழாநடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+