விமான தாக்குதலில் 3 அமெரிக்க கமாண்டோக்கள் பலி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

அமெரிக்க விமானங்கள் வீசிய குண்டு தவறான இலக்கில் விழுந்து வெடித்ததால் 3 அமெரிக்க கமாண்டோக்களும்5 ஆப்கானியர்களும் கொல்லப்பட்டனர்.

காண்டஹாரின் வடக்குப் பகுதியில் அமெரிக்க விமானங்கள் கடும் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தி வருகின்றன.

நேற்று நடந்த தாக்குதலின்போது, இவ்விமானங்கள் வீசிய குண்டுகள் தவறான இலக்கில் விழுந்து வெடித்ததில், 3அமெரிக்க கமாண்டோ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவத்தில் 17 அமெரிக்க கமாண்டோக்களும் 18 நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரும் படுகாயமடைந்தனர்.

அமெரிக்க தாக்குதலில் 80 பொதுமக்கள் பலி

ஆப்கானிஸ்தான்-தோரா போரா பகுதியில் அமெரிக்க விமானங்கள் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் 80க்கும்மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு உதவி அமைப்புதெரிவித்தது.

கடந்த 1ம் தேதி முதல் நடத்தப்பட்ட தாக்குதல்களில் அந்த உதவி அமைப்பு 80க்கும் மேற்பட்ட உடல்களைமீட்டுள்ளது.

மேலும் காயமடைந்த 50 பேரைக் காப்பாற்றி கோகியானி மற்றும் ஜலாலாபாத் மருத்துவமனைகளில் இந்த உதவிஅமைப்பு சிகிச்சைக்காக சேர்த்துள்ளது.

அமெரிக்க விமானத் தாக்குதல்களுக்கு அப்பாவிப் பொதுமக்கள் அநியாயமாகக் கொல்லப்படுவதற்கு வருத்தம்தெரிவித்த இந்த அமைப்பினர், கடந்த வாரம் மசார்-ஏ-ஷெரீப் சிறைக் கலவரத்தில் ஈடுபட்ட 500 பேர்கொல்லப்பட்டதற்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+