ஜெயலலிதாவுக்கு விஜயகாந்த் வாழ்த்து
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா டான்சி வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதற்கு தமிழக மக்கள்எந்தளவுக்கு மகிழ்ச்சி அடைகிறார்களோ அதே அளவுக்குத் தானும் மகிழ்ச்சி அடைவதாக தென்னிந்திய நடிகர்சங்கத் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தீவிர கருணாநிதி மற்றும் மூப்பனார் ஆதரவாளராக இருந்து வந்த விஜயகாந்த் கொஞ்சம் கொஞ்சமாக மாறஆரம்பித்துள்ளார். விஜயகாந்த்துக்கு சரியாக தமிழே பேச வரவில்லை என்று கருணாநிதி ஒரு முறை கமெண்ட்அடித்ததிலிருந்து அவர் மீது அதிருப்தியுடன் உள்ளார் விஜயகாந்த்.
இப்போது வெளிப்படையாக ஜெயலலிதாவை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில் ஜெயலலிதாவைச்சந்தித்து அவரிடம் திரையுலகப் பிரச்சினைகள் குறித்துப் பேசினார்.
இது திரையுலகில் மட்டுமல்லாது அரசியல் உலகிலும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் சில நாட்களுக்குமுன்பாக கருணாநிதியைச் சந்தித்து தான் யார் பக்கமும் இல்லை என்பது போல காட்டிக் கொண்டார் விஜயகாந்த்.
இந்நிலையில் தற்போது ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பேட்டியளித்துள்ளார் விஜயகாந்த். டான்சி வழக்கிலிருந்துஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டது குறித்து அவர் கூறுகையில்,
நடிகர் சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர் ஜெயலலிதா. அவர் தன் மீது தொடரப்பட்ட வழக்குகளிலிருந்து விடுதலைசெய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது.
தமிழக மக்கள் இந்த விடுதலை செய்திக்கு எப்படி மகிழ்ச்சியடைகிறார்களோ அதே அளவிலான மகிழ்ச்சியைத்தான்நானும் மற்ற நடிகர் சங்க உறுப்பினர்களும் பெற்றுள்ளோம் என்று கூறினார் விஜயகாந்த்.
கண்ணப்பன் வாழ்த்து:
டான்சி மற்றும் கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்குகளிலிருந்து ஜெயலலிதா விடுதலைசெய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி தருவதாக மக்கள் தமிழ் தேசம் கட்சித் தலைவர் கண்ணப்பன் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் கடந்த ஆட்சிக்காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் கண்ணப்பன்.ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் இருந்த அவர் நறைய சம்பாதித்து விட்டதாக செய்திகள் வெளியாகின. ஆட்சிமாறியவுடன் கண்ணப்பன் அணி மாறினார்.
சமீபத்திய பொதுத் தேர்தலின்போது மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியைத் துவக்கினார். திமுகவுடன் கூட்டணிவைத்து தேர்தலைச் சந்தித்து படுதோல்வியடைந்தார்.
அதற்குப் பிறகு அமைதியாக இருந்து வந்த அவர் தற்போது ஜெயலலிதா வழக்குகளிலிருந்து விடுதலைசெய்யப்பட்டது மகிழ்ச்சி தருவதாக அறிக்கை விட்டுள்ளார்.
அவரது அறிக்கையில், இந்தத் தீர்ப்பு ஜனநிாயகத்தின் மீது நிம்பிக்கை வைத்துள்ளோருக்கு ஊக்கம் தருவதாகஅமைந்துள்ளது. இந்த வழக்கிலிருந்து ஜெயலலிதாவும், மற்றவர்களும் விடுதலை செய்யப்பட்டிருப்பதைமகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications