பந்த் துவங்கியது: வன்முறையில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்
சென்னை:
தமிழக எதிர்க்கட்சிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தும் பந்த்தின்போது, வன்முறையில் ஈடுபடுபவர்கள் தேசியபாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கட்டண-விலைவாசி உயர்வுகளை முழுவதுமாகக் குறைக்க வேண்டும் என்று கோரி கம்யூனிஸ்ட், காங்கிரஸ்,தமாகா உள்ளிட்ட எட்டு எதிர்க்கட்சிகள் ஒரு பிரிவாகவும், திமுக ஒரு பிரிவாகவும் தனித்தனியே இன்று பந்த்நடத்த முடிவு செய்தன.
அதன்படி இன்று காலை 6 மணிக்கு பந்த் துவங்கியது. இன்று நடைபெறும் இந்த 12 மணி நேர பந்த்தையொட்டிதமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று இரவிலிருந்தே போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதிலும் ரோந்துப்போலீசார் சுற்றி வருகின்றனர்.
அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றுக்குக் கூடுதல்பாதுகாப்பு போடப்பட்டிருப்பதால், பணிகள் வழக்கம்போல் நடைபெறும் என்று அரசு கூறியுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களான பால், குடிநீர், மின்சாரம் ஆகியவை வழங்கப்படுவதில் பாதிப்பு வராமல்இருப்பதற்காகவும் முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் பந்த் நிலவரத்தை அறிந்துகொள்ள உதவும் பொருட்டு, சென்னையில் உள்ள டி.ஜி.பி.அலுவலகத்தில் சிறப்புக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு வண்டிகளும், ஆம்புலன்ஸ் வண்டிகளும் தயார் நிலையில் உள்ளன.
இதற்கிடையே, இந்த பந்த்தின்போது வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீதும், கடைகளையும் அலுவலகங்களையும்மூட வற்புறுத்துபவர்கள் மீதும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கைஎடுக்கப்படும்.
மேலும் அவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications