45 பஸ்கள் உடைப்பு: மதுரையில் பஸ் எரிப்பு
சென்னை:
தமிழகத்தில் நடந்து வரும் பந்த்தையொட்டி பல்வேறு இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடந்தது.
பிற்பகல் வரை சுமார் 45 பஸ்கள் உடைக்கப்பட்டன. சேலம், சிதம்பரம், பண்ருட்டி, வேலூர் ஆகிய இடங்களில்தான் பெரும்பாலான பஸ்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. தனியார் பஸ்கள் தான்ரெளடிகளின் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்பதால் இயக்கப்படவில்லை.
மதுரையில் நகைக்கடை பஜார், டவுன்ஹால் ரோடு ஆகிய இடங்களில் சமூக விரோதிகளுக்கு தாக்குதலுக்கு அஞ்சிமூடப்பட்டிருந்தன. ஆனால், பிற பகுதிகளில் கடைகள் வழக்கம்போல் திறந்திருந்தன.
மதுரை அண்ணா நகரில் ஒரு பஸ்சின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் அந்த பஸ் தீப் பிடித்து எரிந்தது.பல இருக்கைகளில் தீ பிடித்தது. இதையடுத்து அதில் இருந்த பயணிகள் பயந்து இறங்கி ஓடினர். உடனடியாக தீஅணைக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் இச் சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
நெய்வேலி சுரங்கத்தில் திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிக்குச்செல்லவில்லை. இதனால் நிலக்கரி வெட்டி எடுப்பது பாதிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கையில் முன்னாள் அமைச்சர் த.கிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடந்தது. இதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டார். அதே போல முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் பெரும் எண்ணிக்கையிலானதிமுகவினர் போராட்டம் நடத்தி கைதாகினர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications