போலீசாரில் கற்பழிக்கப்பட்ட ரீட்டா மேரிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு
சென்னை:
செஞ்சி கிளைச் சிறையில் போலீசாரால் கற்பழிக்கப்பட்ட இளம் பெண் ரீட்டா மேரிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம்நஷ்ட ஈடு கொடுக்கிறது.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த ரீட்டா மேரி என்ற 20 வயது இளம் பெண் விபச்சார வழக்கில் கைதுசெய்யப்பட்டு செஞ்சி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அவரை அங்கிருந்த காவலர்கள் கற்பழித்ததாக புகார் எழுந்ததையடுத்து 2 வக்கீல்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரினர்.
பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஐ.ஜி. திலகவதி இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார்.இதையடுத்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க நீதிபதி தினகர் உத்தரவிட்டார்.
சி.பி.சி.ஐ.டி. போலீஸார் மேற்கொண்ட விசாரணையின் இறுதியில் செஞ்சி கிளைச் சிறையைச் சேர்ந்த வார்டன்கள்லாசரஸ், அன்பழகன், சேகர், ஜெயபால் மற்றும் ஆத்தூர் போலீஸ் கான்ஸ்டபிள் முருகேஷ், விபச்சார புரோக்கர்ஆனந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழக உள்துறைச் செயலாளர் நரேஷ் குப்தா இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில்,இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ரீட்டா மேரிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடாகக் கொடுக்கும் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications