முல்லைப் பெரியாறு அணை: மத்திய-தமிழக அரசுகளுக்கு கேரளா கோரிக்கை
திருவனந்தபுரம்:
முல்லைப் பெரியாறு அணையை உயர்த்தும் முயற்சியில் ஈடுபடக் கூடாது என்று மத்திய அரசையும் தமிழகஅரசையும் கேரள அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
கேரள சட்டசபையில் இதுகுறித்த தீர்மானம் இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டுவரப்பட்டது.
கேரள பாசனத்துறை அமைச்சர் டி.எம். ஜேக்கப் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். தற்போதுள்ள 136அடிக்கு மேல் இந்த அணையை உயர்த்தினால் எவ்வளவு ஆபத்து ஏற்படும் என்பதையும் எவ்வளவு உயிர்ச் சேதம்ஏற்படும் என்பதையும் எடுத்துக் கூறினார்.
அந்தக் காலப் பொருட்களைக் கொண்டு 100 வருடங்களுக்கு முன் அந்த அணை கட்டப்பட்டுள்ளதால்,தற்போதுள்ள உயரத்தைக் கூட்டினால் நிலநடுக்கம் ஏற்படுவதற்குக் கூட வாய்ப்புள்ளது என்றும் ஜேக்கப் கூறினார்.
அணையை உயர்த்திக் கட்டுவதால் இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டங்களைச் சேர்ந்த கேரள மக்களுக்குஏற்படும் பாதிப்பு பற்றி ஏற்கனவே மத்திய அரசின் கண்காணிப்புக் குழு அளித்த அறிக்கையின் விவரத்தையும்அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
இதனால் மத்திய மற்றும் தமிழக அரசுகள் இந்த அணையை உயர்த்த வேண்டிய நடவடிக்கைள் குறித்து முயற்சிமேற்கொள்ளக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்து கேரள சட்டசபையில் தீர்மானம் இயற்றப்பட்டது.
இதுகுறித்து கேரள முதல்வர் ஏ.கே. அந்தோணி கூறுகையில், இந்தத் தீர்மானம் கேரள மக்களின் பாதுகாப்பைக்கருத்தில் கொண்டு இயற்றப்பட்டதே தவிர தமிழக அரசுக்கு எதிரானது அல்ல என்று கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications