இலங்கையில் வன்முறை: ஊரடங்கு நீட்டிப்பு
கொழும்பு:
இலங்கையில் தேர்தலையடுத்து வன்முறை தொடர்ந்து நிலவி வருவதால், அங்கு ஊரடங்கு உத்தரவுநீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்துதான் இந்த ஆர்ப்பாட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது. தேர்தல் பிரச்சாரத்தின்போதே பல்வேறுவன்முறைச் சம்பவங்களில் 41 பேர் கொல்லப்பட்டனர்.
தேர்தலின்போதும் இந்நகரில் பயங்கரமான கலவரம் ஏற்பட்டது. அப்போது 10 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்.இதைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றும் (வியாழக்கிழமை) கலவரம் தொடர்ந்தது. வாட்டகேதரா நகரில் உள்ள பல பெட்ரோல்நிரப்பும் மையங்கள் எரிக்கப்பட்டன. இதையடுத்து, இலங்கை முழுவதும் காலவரையின்றி ஊரடங்கு உத்தரவுதற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்திலிருந்து இதுவரை 60 பேர் வன்முறைக்குப் பலியாகியுள்ளனர். ஆனால் இது தொடர்பாகஇன்னும் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. வன்முறை தொடர்பாக விசாரணைக்கு மட்டும்உத்தரவிட்டுள்ளார் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா.
இந்நிலையில் கண்டி மாவட்ட தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இங்கு மறுதேர்தலை நடத்தலாமா என்பது பற்றியும் தேர்தல் ஆணையம் யோசித்து வருகிறது.
ராணுவம் தாக்கி 7 புலிகள் பலி:
இதற்கிடையே நேற்று மாலை வல்வெட்டித் துறையில் இலங்கை ராணுவத்தினர் தாக்கியதில் 7 விடுதலைப் புலிகள்கொல்லப்பட்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்தினருக்கும் பயங்கரத் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
வல்வெட்டித் துறை முழுவதும் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அருகில் உள்ள காட்டுபபகுதியில் இருந்துதான் விடுதலைப் புலிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications