தலிபான் ஆட்சி முடிந்தது: கார்சாய் மகிழ்ச்சி
காபூல்:
காண்டஹார் நகரை ஒப்படைக்க முன் வந்ததன் மூலம் தலிபான்களின் ஆட்சி முழுவதுமாக முடிவுக்கு வந்தது என்றுஆப்கானிஸ்தான் பிரதமராக விரைவில் பொறுப்பேற்கவுள்ள ஹமீத் கார்சாய் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
எப்படியும் காண்டஹாரைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்று அவர்கள் எவ்வளவோ முயற்சி செய்துபார்த்தனர். அமெரிக்க விமானங்களுக்கும் காண்டஹாரைக் கைப்பற்றுவது பெரும் சிரமமாகவே இருந்து வந்தது.நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரும் தட்டுத் தடுமாறித்தான் போனார்கள்.
இந்நிலையில் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல், காண்டஹார் நகரை ஒப்படைத்து விடுகிறோம் என்றுதலிபான்கள் நேற்று (வியாழக்கிழமை) அறிவித்தனர்.
இதையடுத்து, இன்று காலையிலிருந்தே தலிபான் படையினர் தங்களிடமிருந்த ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் ஒப்படைக்க ஆரம்பித்தனர். தற்போது அவர்கள் தங்களிடமிருந்த அனைத்து ஆயுதங்களையும்ஒப்படைத்து விட்டனர்.
காண்டஹாரில் உள்ள முக்கிய அலுவலகங்கள், விமான நிலையம், ராணுவ நிலைகள் ஆகியவற்றை தலிபான்கள்காலி செய்துவிட்டனர். இதையடுத்து ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி முழுமையாக முடிவுக்குவந்துள்ளது என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் கார்சாய்.
இன்று மாலை அல்லது நாளைக்குள் தலிபான் தலைவரான முல்லா முகமது ஒமர் சரணடையக் கூடும் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும் அவருக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் தவறு செய்ததுநிரூபிக்கப்பட்டால் நிச்சயம் தண்டனையும் உண்டு என்றும் கார்சாய் கூறியுள்ளார்.
அமெரிக்க மெரைன் படையினர் தாக்கி 7 அல்-கொய்தாவினர் பலி:
இதற்கிடையே அமெரிக்க மெரைன் படையினர் தங்களுடைய முதலாவது தரைப்படைத் தாக்குதலைத்தொடுத்துள்ளனர்.
இத்தாக்குதலில் 7 அல்-கொய்தா படையினர் கொல்லப்பட்டனர்.
தலிபான் ஆதரவு படையினர் பாகிஸ்தானுக்குத் தப்பி ஓட்டம்:
இந்நிலையில் தலிபான்களுக்கு ஆதரவாக அமெரிக்காவை எதிர்த்துச் சண்டையிட்ட பல வெளிநாட்டு வீரர்களும்அல்-காய்தா படையினரும் பாகிஸ்தானுக்குத் தப்பி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
பாகிஸ்தான் தன்னுடைய எல்லைப் பகுதியை இழுத்து மூடிய போதிலும், நீளமான எல்லைப் பகுதிகள் வழியாகபாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளனர். பாகிஸ்தானின் பல இடங்களில் அவர்கள் தென் பட்டதாகக் கூறப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications