பந்த் தோற்றது ஏன்?
சென்னை:
தமிழகத்தில் விலைவாசி உயர்வை எதிர்த்து எதிர்க் கட்சிகள் நடத்திய பந்த்தை மக்களே தோற்கடித்து பாடம்கற்பித்துள்ளனர்.
ஆட்சியில் இருக்கும்போது விலைவாசியை உயர்த்துவதும் எதிர்க் கட்சியான பிறகு விலைவாசியை எதிர்த்து பந்த்,போராட்டம் நடத்துவது என அதிமுக, திமுக இரண்டுமே தமிழக மக்களை தொடர்ந்து கடுப்படித்து வருகின்றன.
இந் நிலையில் வந்தது மின்சார, பஸ், அரிசி விலை உயர்வு. உடனே அதை எதிர்த்துப் 7ம் தேதி பந்த் நடத்தப்போவதாக காங்கிரஸ் தலைமையிலான கட்சிகள் அறிவித்தன. முக்கிய எதிர்க் கட்சியான திமுக அதே நாளில்தனியாக பந்த் நடத்துவதாக அறிவித்தது.
அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுக அரசுக்கு எதிராக நடக்கும் பந்துக்கு த.மா.காவும் ஆதரவுதந்தது. வாரத்துக்கு ஒரு கூட்டணிக்குத் தாவும் பா.ம.க. இப்போது அதிமுக கூட்டணியில் இல்லை. இதனால் அந்தக்கட்சியும் பந்த்துக்கு ஆதரவை அள்ளிக் கொடுத்தது.
எந்தக் கூட்டணியில் இருக்கிறோம் என்பதே தெரியாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஜாதிக் கட்சிகள்,சில்லரைக் கட்சிகள் எல்லோரும் சேர்ந்து இந்த பந்த்தை நடத்தின.
ஆனால், இவர்களுக்கு பெரும் அதிர்ச்சி தரும் வண்ணம் பந்த்தை மக்கள் கண்டுகொள்ளவேயில்லை. இதற்காகவிலைவாசியை மக்கள் ஆதரிப்பதாக அர்த்தமில்லை. கட்சிகளிடம் ஏமாறத் தயாராக இல்லை என்பதைத் தான்பொது மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனால் நேற்றைய பந்த் முழுத் தோல்வி அடைந்தது. பந்த்தை முறியடிக்க அரசு பல முயற்சிகளை எடுத்தது.ஆனால், இதெற்கெல்லாம் தேவையே இருக்கவில்லை. பந்த் முழுமையாக மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவேயில்லை. தங்கள் வேலைகளை பொது மக்கள் வழக்கம்போல்மேற்கொண்டனர். பஸ்களில் வழக்கம்போல் கூட்டம் இருந்தது. ரயில்கள் வழக்கம்போல் ஓடின. அரசுஅலுவலகங்கள் இயங்கின. கடைகள் திறந்திருந்தன.
பள்ளி, கல்லூரிகள் திறந்திருந்தன. பந்த் முழுத் தோல்வி அடைந்துள்ளது.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications