ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை
சென்னை:
சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
சேலம் பேர்லாண்ட்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் அர்த்த-னாரி. இவரது மனைவி பர்வத லட்சுமி, மகள்கள் மகேஸ்வரிமற்றும் கோகிலா. மகேஸ்வரிக்கு ஒரு வயதுதான் ஆகிறது. அர்த்த-னாரி பாடி பில்டிங் கம்பெனி ஒன்றில் வேலைபார்த்து வந்தார்.
வெள்ளிக்கிழமை காலை பர்வத லட்சுமியின் சகோதரர் மாதையன் தனது சகோதரி வீட்டுக்கு வந்தார். கதவைத்தட்டியும் யாரும் திறக்காததால் சந்தேகமடைந்த அவர் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்தார்.
அவரது சகோதரர் உள்ளே சென்று பார்த்தபோது பர்வதலட்சுமியும், மகேஸ்வரியும் பிணமாக கிடந்த-னர். அருகில்அர்த்தனாரியும், கோகிலாவும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.
உடனடியாக இருவரையும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே அர்த்த-னாரி இறந்துவிட்டார். கோகிலா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அர்த்த-னாரி குடும்பத்தினர் தற்கொலைக்கான காரணம்தெ-ரியவில்லை.












Click it and Unblock the Notifications