அமெரிக்க மின் நிலையத்தை எதிர்த்து கிராம மக்கள் போராட்டம்
கூடலூர்:
கூடலூரில் அமைக்கப்பட்டு வரும் அமெரிக்க மின் நிலையத்தை எதிர்த்து கிராம மக்கள் பெரும் போராட்டம்நடத்தினர்.
ரூ. 1,000 கோடி செலவில் எஸ்.டி.சி.எம்.எஸ். என்ற அமெரிக்க நிறுவனம் இங்கு அனல் மின் நிலையத்தைஅமைத்து வருகிறது. 250 மெகாவாட் திறன் கொண்ட இந்த மின் நிலையம் அமைக்கும் பணி மிக வேகமாக நடந்துவருகிறது.
இந் நிலையில் இன்று காலை பாட்டாளி மக்கள் கட்சி எம்.பி. பொன்னுசாமி தலைமையில் ஆயிரக்கணக்கானகிராமத்தினர் அந்த மின் நிலையத்துக்குள் நுழைய முயன்றதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து மாவட்டக் கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
இந்த மின் நிலையம் அமைக்க நிலம் கொடுத்த கிராம மக்களுக்கு உரிய இழப்பீடு தராமல் இதன் உரிமையாளர்கள்இழுத்தடித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் நிலம் கொடுக்கும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தருவதாககொடுத்த உறுதிமொழியையும் இந்த நிறுவனம் மதிக்கவில்லை.
இதையடுத்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. 15 நாட்களுக்குள் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதகாகமாவட்டக் கலெக்டர் கொடுத்த உறுதிமொழியையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
பாதுகாப்புக்காக அங்கு போலீஸ் முகாமும் அமைக்கப்பட்டுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications