விழுப்புரம் அருகே மீனவர்கள் கடும் மோதல்: படகுகளுக்குத் தீவைப்பு
சென்னை:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் என்ற இடத்தில் மீனவர்களுக்கு இடையே நடந்த கடும் மோதலில் பலபடகுகளுக்குத் தீவைக்கப்பட்டது. 14 பேர் காயமடைந்தனர்.
மரக்காணம் அருகே உள்ள அனுமந்த குப்பம் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு ஒருவர் கொலைசெய்யப்பட்டார். இதுதொடர்பாக 48 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்கள் தற்போது நிபந்தனைஜாமீனில் விடுதலையாகி உள்ளனர்.
இந்த நிலையில் குப்பத்தில் அடிக்கடி சண்டை நடப்பதால் யாரும் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்று கருதியசிலர் ஊர் பஞ்சாயத்தைக் கூட்டி அமைதிப் பேச்சுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த பேச்சுவார்த்தையில் பல மீனவகிராங்களைச் சேர்ந்த பெரியவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்களில் சிலரை அனுமந்த குப்பத்தைச் சேர்ந்த சிலர் தாக்கியுள்ளனர். இதையடுத்துதேவராம்பட்டினம் உள்ளிட்ட சில குப்பத்தைச் சேர்ந்தவர்கள் அனுமந்த குப்பத்திற்குச் பயங்கரஆயுதங்களுடன்சென்றனர்.
ஆனால் அங்கு யாருமே இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அக்கும்பல் கிராமத்தில் இருந்த மீன் பிடி படகுகள்,குடிசைகள் ஆகியவற்றை தீயிட்டுக் கொளுத்தினர். இதில் 50க்கும் மேற்பட்ட படகுகள், குடிசைகள் தீக்கிரையாகின.14 பேர் அரிவாள்களால் வெட்டப்பட்டனர்.
தகவல் தெரிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்குபோலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications