கட்டண வசூலிப்பால் சுத்தமான அரசு மருத்துவமனைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசு மருத்துவமனைகளில் பார்வையாளர்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று சமீபத்தில் தமிழக அரசுஅறிவித்ததையடுத்து, பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. இதனால் மருத்துவமனைகள்படு சுத்தமாகக் காட்சியளிக்கின்றன.

நிதி நெருக்கடியைச் சமாளிக்க கடந்த மாத இறுதியில் தமிழக அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளையும்,கட்டண-விலைவாசி உயர்வுகளையும் அறிவித்தது.

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளைப் பார்க்க வருபவர்களிடம் ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும்அரசு அறிவித்திருந்தது. கடந்த டிசம்பர் 1ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வந்தது.

முன்பெல்லாம் நோயாளிகளைப் பார்க்க வருவதாகக் கூறிக்கொண்டு, ஒரு நோயாளியைப் பார்ப்பதற்குநூற்றுக்கணக்கான பேர் வருவார்கள். எல்லாம் ஒரு "கெளரவ" பிரச்சனைக்காகத்தான்.

மருத்துவமனையில் தன்னைப் பார்க்க வரவில்லை என்று உறவினர்களைக் கோபித்துக் கொள்ளும் நோயாளிகளும்நிறைய உண்டு.

இந்த "சென்டிமென்ட்" காரணமாகவே, சாதாரண உடல்நலக் குறைவு என்றாலும் ஒரு நோயாளியைப்பார்ப்பதற்காக, திருவிழா கூட்டம் போல நூற்றுக்கணக்கான உறவினர்கள் கூடி விடுவார்கள்.

பிறகு என்ன? மருத்துவமனை முழுவதும் சந்தைக் கடை போல ஆகிவிடும். சுத்தமாக இருக்க வேண்டிய நோயாளிஅறைகளை இவர்களே முக்கால்வாசி அசுத்தப்படுத்தி விட்டுத்தான் செல்வார்கள்.

கண்ட கண்ட இடங்களில் எச்சில் துப்புவதையும், குப்பைகளைக் கொட்டுவதையும் பலர் தலையாய"கடமை"களாகவே கருதிக் கொண்டிருந்தார்கள்.

அரசு மருத்துவமனைகளில் இருக்கும் கழிப்பறைகள் பற்றிக் கேட்க வேண்டியதே இல்லை. இப்படிநூற்றுக்கணக்கான பேர் அதைப் பயன்படுத்துவதால், அது எந்த லட்சணத்தில் இருக்கும் என்று சொல்லித் தெரியவேண்டியதே இல்லை.

ஆனால் தற்போது பார்வையாளர் கட்டணம் வசூலிக்கப்படுவதால், நோயாளிகளைப் பார்க்க வரும் கூட்டம்வெகுவாகக் குறைந்து விட்டது. கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டவுடன், முன்பிருந்தசென்டிமென்ட் எல்லாம் எங்கே போயின என்றே தெரியவில்லை.

இதனால் அரசு மருத்துவமனைகள் அனைத்தும் கடந்த சில நாட்களாக அவ்வளவு அமைதியாகவும், சுத்தமாகவும்காணப்படுகின்றன.

நோயாளிகளின் குடும்பத்தினர் மட்டுமே பெரும்பாலும் மருத்துவமனைகளில் காணப்படுகிறார்கள். அவர்களுக்குஅந்த நோயாளியைப் பற்றிய அக்கறை இருக்காதா என்ன?

அதனால், அரசு மருத்துவமனை வளாகங்கள் பெரும் அமைதியுடன் காணப்படுகின்றன. மேலும், நோயாளிகளைப்பார்க்க வரும் குடும்பத்தினர் நோயாளிகள் இருக்கும் இடத்தைப் படு சுத்தத்துடன் வைத்துக் கொள்கின்றனர்.

கூட்டம் குறைந்திருந்தாலே போதாதா? இருக்கும் ஓரிரண்டு குப்பைகளைக் கூட மருத்துவமனை ஊழியர்கள்அள்ளிக் கொண்டு போய் விடுவதால், அரசு மருத்துவமனைகள் தற்போது அவ்வளவு சுத்தமாகஇருக்கின்றனவாம்.

மேலும் இங்கு வரும் பல பேர், இது என்ன அரசு மருத்துவமனையா, இல்லை தனியார் மருத்துவமனையா என்றுஆச்சரியப்பட்டுப் போகிறார்களாம்.

கொசுறுச் செய்தி: கட்டண வசூலிப்பால், மருத்துவமனைகள் சுத்தமானதோடு மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கானரூபாய் அரசு மருத்துவமனைகளில் தற்போது வசூலாகியுள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+