பதவி ஏற்றார் ரணில்: விரைவில் இந்தியா வருகை
கொழும்பு:
இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே இன்று(ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் பதவி ஏற்றுக் கொண்டார்.
ரணிலின் குடும்பத்தினரும், அவருடைய கட்சித் தலைவர்களில் முக்கியமானவர்களும், இலங்கை முஸ்லீம்காங்கிரஸ் தலைவர் ராப் ஹக்கீமும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், பதவியேற்பு நிகழ்ச்சியைப் படமெடுக்க ரணில் குடும்பத்தினருக்குச் சொந்தமான தொலைக்காட்சிஉள்பட பல பத்திரிக்கை நிறுவனங்களுக்கு சந்திரிகா அரசு தடை விதித்திருந்தது.
பதவியேற்றுக் கொண்டதும், அருகில் உள்ள ஒரு புத்தக் கோவிலுக்குச் சென்று வழிபட்டார் ரணில். விரைவில் தன்அமைச்சரவையை அவர் அறிவிக்கவுள்ளார்.
இதற்கிடையே பாதுகாப்பு மற்றும் நிதித் துறைகளை ரணில் அமைச்சரவையிடமே ஒப்படைப்பதற்கு சந்திரிகாமுடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் இச்செய்தியை மறுத்துள்ளன.
ஆனால், அமைச்சரவையில் சந்திரிகாவின் மக்கள் கூட்டணிக் கட்சிக்கும் இடம் கொடுக்க ரணில் தயாராகஇருப்பதாக "தி சண்டே டைம்ஸ்" பத்திரிக்கை கூறியிருந்தது. இதன் மூலம் அவர் ஒரு தேசிய அரசை அமைக்கப்போவதாகவும் அப்பத்திரிகை தெரிவித்திருந்தது.
இந்தியா வருகிறார் ரணில்:
இதற்கிடையே புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இம்மாத இறுதியில் இந்தியா வருவதாக கூறப்படுகிறது.
கொழும்பில் உள்ள இந்தியத் தூதர் கோபாலகிருஷ்ண காந்தியைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட ரணில்,தான் இந்தியா வரவுள்ளதாகக் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே நார்வே குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு இந்தியாதன்னுடைய ஆதரவை ஏற்கனவே அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications