சென்னை போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் அதிரடி இட மாற்றம்
சென்னை:
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் கே. முத்துக்கருப்பன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிரடியாக இடமாற்றம்செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக தற்போது அதிரடிப்படை ஐ.ஜி.யாக இருந்து வரும் விஜயகுமார்நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் தமிழகத்தில் அதிமுக அரசு பதவியேற்றதும், சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டவர்முத்துக்கருப்பன்.
ஜூன் மாத இறுதியில் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டது மற்றும் ஆகஸ்டு மாதம் 12ம் தேதி திமுகபேரணியின்போது ஏற்பட்ட வன்முறை ஆகிய சம்பவங்களை அடுத்து, முத்துக்கருப்பனை மத்திய அரசுப் பணிக்குஅனுப்ப வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
ஆனால், அவரை அனுப்ப முடியாது என்று தமிழக அரசு பிடிவாதமாக இருந்தது.
இந்நிலையில் முத்துக்கருப்பன் இன்று இடமாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு திடீரென்று அறிவித்துள்ளது.அவர் தற்போது திருச்சி ஆயுதப் படை ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முத்துக்கருப்பனுக்குப் பதிலாக, தற்போது சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளஅதிரடிப்படை ஐ.ஜியான விஜயகுமார் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய அதிரடிப்படை ஐ.ஜியாக நடராஜ் என்ற போலீஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த இடமாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வந்தது. இன்று இரவு சுமார் 07.30 மணியளவில் புதிய சென்னைமாநகர போலீஸ் கமிஷனராக விஜயகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் பொறுப்புக்களைஒப்படைத்தார் முத்துக்கருப்பன்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications