தமிழ் தீவிரவாத அமைப்புகளுக்கு விரைவில் தடை?
சென்னை:
தமிழர் விடுதலைப் படை, தமிழ்நாடு மீட்புப் படை ஆகியவற்றிற்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு பசீலித்துவருவதாக மத்திய உள்துறை இணையமைச்சர் ஐ.டி. சுவாமி கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜம்மு-காஷ்மீல் பயங்கரவாதம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.அதில் சுவாமி கலந்து கொண்டு பேசினார். பின்னர் பாரதீய ஜனதாக் கட்சி அலுவலகத்தில் அவர் நிருபர்களிடம்கூறியதாவது:
தமிழகத்திலிருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளான தமிழர் விடுதலைப் படை, தமிழ்நாடு மீட்புப் படைஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
ஆனால் இந்த கோரிக்கைக்கு வலு சேர்க்கும் விதமான ஆதாரங்களை தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு இந்த அமைப்புகளை மத்திய அரசு தடை செய்யும். தற்போது தமிழக அரசின் கோரிக்கை குறித்து பரிசீலனைநடந்து வருகிறது.
தமிழகத்திற்கு விரைவில் புதிய ஆளுநர் நியமிக்கப்படுவார். மாநில அரசுடன் கலந்து ஆலோசித்த பின் இது இறுதிசெய்யப்படும்.
ஜம்மு-காஷ்மீர் போன்ற எல்லை மாநிலங்களில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு எல்லைப் பாதுகாப்புப்படையினர் அதிக அளவில் தேவைப்பட்டது.
இதற்காகத்தான் சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப்படையினர் திருப்பி அழைக்கப்பட்டனர். இதில் வேறு எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் உள்ளிட்ட 3 ஐ.பி.எஸ். அதிகாகளை மத்திய பணிக்குஅனுப்புமாறு தொடர்ந்து தமிழக அரசை மத்திய அரசு கோரி வருகிறது. ஆனால் இதுதொடர்பாக நிர்ப்பந்திக்கப்போவதில்லை.
பொடோ சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி அதை நிறைவேற்றியே தீருவோம். இந்த சட்டம்தீவிரவாதிகளுக்கு எதிரானது. மக்களுக்கு விரோதமானதல்ல. பத்திக்கையாளர்களுக்கு பாதகமான அம்சம் இந்தசட்டத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டது.
காங்கிரஸ் கட்சி இதை கெளரவப் பிரச்சினையாக கருதுகிறது. ஆனால் அக்கட்சியின் பெரும்பான்மையானதலைவர்கள் இந்த சட்டத்தை ஆதக்கிறார்கள்.
எனவே கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு இந்த சட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி நாடாளுமன்றத்தில் அதை ஆதரிக்க செய்வார்கள் என்ற நம்பிக்கை பாரதீய ஜனதாக் கட்சிக்குஉள்ளது என்றார் சுவாமி.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications