தலிபான்களுக்கு பெங்களூரில் இருந்து சாப்ட்வேர் சப்ளை: சீனர்கள் சிக்கினர்
பெங்களூர்:
தலிபான்களுக்குத் தேவையான உளவு பார்க்கும் கருவிகளை சீன நிறுவனம் பெங்களூரில் தயாரித்து வந்த விவரம்இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த நிறுவனம் உளவு பார்க்கும் கருவிகள், டெலிபோன் ஒட்டு கேட்கும் கருவிகள் மற்றும் பாதுகாப்புக்கருவிகளுக்குத் தேவைப்படும் சாப்ட்வேரைத் தயாரித்து வந்துள்ளது. அவற்றை தலிபான்களுக்கும்,பின்லேடனுக்கும் பாகிஸ்தான் வழியாக அனுப்பி வந்துள்ளனர்.
இது குறித்த தகவல் இந்திய உளவுப் பிரிவுகளுக்கு தெரிய வந்ததையடுத்து கடந்த மாதம் பிரதமர் தலைமையில்கூடிய பாதுகாப்புத்துறைக்கான கேபினட் கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
அக் கூட்டத்தில் இந்த சீனர்கள் அனைவரையும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றுவது எனமுடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் உதவியுடன் தான் பாகிஸ்தான்-தலிபான் இடையிலான ரகசிய தொலைபேசி கட்டமைப்புஉருவாக்கப்பட்டது என்பதையும் இந்திய வெளிநாட்டு உளவுப் பிரிவான ரா கண்டறிந்துள்ளது. ரா மற்றும்இன்டலிஜென்ஸ் பீரோ இணைந்து நடத்திய ரகசிய விசாரணையில் இந்த நிறுவனத்துக்கும் தலிபான்களுக்கும்இடையிலான உறவு வெளியில் வந்துள்ளது.
சீனா நிறுவனம் மறுப்பு:
இந் நிலையில் தங்களுக்கும் தலிபான்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் அப்படிப்பட்ட கருவிகளைத்தயாரிக்கவில்லை எனவும் ஹூவாவெய் டெக்னாலஜிஸ் நிறுவனம் மறுத்துள்ளது.
இந் நிறுவனத்தின் செய்தித் தொடர்பு அதிகாரி ஜில்பர்ட் கூறுகையில், தலிபான் போன்ற ஒரு அரசுடன் நாங்கள்தொழில் உறவு வைத்திருப்பதாகக் கூறுவதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. எங்களுக்கு தலிபான்களுடன்எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், நாங்கள் பாகிஸ்தானில் வர்த்தகம் செய்து வருகிறோம்.
வயர்லெஸ் தொழில்நுட்பக் கருவிகள், தொலைபேசி ஸ்விட்களைத் தான் தயாரித்து வருகிறோம். இது தவிரநெட்வொர்க்கின் தொடர்பான ரெளட்டர்களுக்குத் தேவையான சாப்ட்வேரைத் தயாரித்து வருகிறோம்.
எங்கள் நிறுவனத்தின் பெங்களூர் கிளையில் 500 பேர் பணியாற்றி வருகின்றனர் என்றார்.
அங்கு பணிபுரியும் என்ஜினியர்களில் சீனர்களுக்கு மட்டுமே தயாராகும் சாப்ட்வேரின் அப்ளிகேஷன் குறித்துமுழுமையாகத் தெரியும் எனவும் இந்திய உளவுப் பிரிவுகள் கண்டறிந்துள்ளன. மற்ற தொழிலாளர்களிடம்விவரங்கள் மறைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications