தமிழகத்தின் புகழ் பெற்ற தாய்மார்கள் யார்?: காளிமுத்து விளக்கம்
சென்னை:
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தாய்மார்கள் யார் என்பது குறித்து சட்டசபை சபாநாயகர் காளிமுத்து விளக்கம் தந்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் வளாகத்தில் அதிமுக சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவின் பெயர்சூட்டப்பட்டுள்ளது.
இந்த மண்டபத்தை காளிமுத்து திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நிதியமைச்சர் பொன்னையன், அமைச்சர் ராமசாமி, தினகரன்எம்.பி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காளிமுத்து நிகழ்ச்சியில் பேசுகையில்,
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற, சிறப்பு மிக்க இரண்டு தாய்மார்கள் குறித்து விளக்கினார்.
அவரது பேச்சின் சில துளிகள்...
தாய் என்பவர் தெய்வத்தின் மறு வடிவம். தாயின் காலடியில்தான் சொர்க்கமே உள்ளது என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்.தாய்தான் தனது பிள்ளைகளின் வளர்ச்சிக்கு முழுக் காரணம் ஆவார்.
தமிழகத்தைப் பொருத்தவரை இரண்டு தாய்மார்கள்தான் புகழ் பெற்றவர்கள் ஆவர். ஒருவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப்பெற்றெடுத்து சத்தியா. இன்னொருவர் புரட்சித் தலைவி ஜெயலலிதாவைப் பெற்றெடுத்த சந்தியா.
நக்கீரர் கூறிய ஆறுபடை வீடுகளில் முக்கிய வீடான பழனியில் உள்ள முருகன் கோவிலில் அன்னை சந்தியா பெயரில்மணிமண்டபம் கட்டியுள்ளது பாராட்டுக்குரியது. வானத்தில் நிலவாக திகழும் ஜெயலலிதாவின் புகழைக் குறைக்க சில கருமேகங்கள் முயலுகின்றன.
ஆனால் அது நடக்காத காரியம். அவர் எப்போதும் முழு நிலவாகவே ஜொலித்துக் கொண்டிருப்பார்.
அடுத்த சட்டசபைக் கூட்டத்தில் ஜெயலலிதா முதல்வராக கலந்து கொள்வார். இது நிச்சயம் நடக்கத்தான் போகிறது என்றார் அவர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications