கன்னியாகுமரியை அழகுபடுத்த ரூ.1 கோடி ஒதுக்கீடு
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியை அழகுபடுத்த ரூ.1 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ககந்தீப் சிங் பேடி நிருபர்களிடம் கூறியதாவது:
கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எனவே கன்னியாகுமரியை அழகுபடுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக மாநில அரசு ரூ.1 கோடி நிதியைஒதுக்கியுள்ளது.
முதல் கட்டமாக கடற்கரையில் சுற்றுலா பயணிகள் நிம்மதியாக அமர்ந்து கடல் அழகை ரசித்துப் பார்க்க வசதியாகரூ.5 லட்சம் செலவில் கல் மற்றும் பிளாஸ்டிக் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்றார் பேடி.












Click it and Unblock the Notifications