ஐயப்பன் பக்தர்களுக்காக பம்பையில் ரயில்வே சிறப்பு முன்பதிவு மையம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பம்பையில் சிறப்பு ரயில்வே புக்கிங் கவுண்டரை தென்னக ரயில்வேதிறந்துள்ளது.
பம்பைக்கு வரும் பக்தர்கள் அங்கிருந்தபடியே தாங்கள் செல்ல விரும்பும் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட்டைமுன்பதிவு செய்து கொள்ள முடியும். அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி வரை இந்த சிறப்பு முன்பதிவு கவுண்டர்செயல்படும்.
செங்கன்னூர் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் எர்ணாகுளம்-ஹைதராபாத் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்-மங்களூர்எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி-பெங்களூர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்-கண்ணனூர், திருவனந்தபுரம்-சென்னைஎக்ஸ்பிரஸ்,
திருவனந்தபுரம்-பாலக்காடு அம்தா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றில் உள்ள பக்தர்களின் கோட்டாவுக்கு இங்கு முன்பதிவுசெய்து கொள்ளலாம்.
தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications