நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் பெரும் அமளி
டெல்லி:
கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களை எடுத்துச் செல்ல சவப் பெட்டிகள் வாங்கியதில் கோடிக்கணக்கில் ஊழல்நடந்துள்ளது.
இந்த கேவலமான சம்பவம் இந்திய கண்ட்ரோலர் ஜெனரல் அலுவலகம் நடத்திய விசாரணையில்தெரியவந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று இந்தப் பிரச்சனையைக் கிளப்பிய எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தையே ஸ்தம்பிக்கவைத்தனர்.
லோக்சபா, ராஜ்யசபா இரண்டிலும் இந்தப் பிரச்சயைை எதிர்க் கட்சிகள் கிளப்பின. இதற்கு பா.ஜ.க. உறுப்பினர்கள்பதில் சொல்ல முயன்றபோது எதிர்க் கட்சி எம்.பிக்களுக்கும் ஆளும் கட்சியினருக்கும் இடையே கடும் மோதல்மூண்டது.
லோக்சபா இன்று காலை கூடியவுடன் காங்கிரஸ் எம்.பி. பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்உறுப்பினர் பாசுதேப் ஆச்சார்யா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் இந்தப்பிரச்சனையைக் கிளப்பினர்.
நாட்டுக்காக உயிரிழந்த வீரர்களுக்கு சவப் பெட்டி வாங்கியதில் கூட மத்திய அரசு ஊழல் செய்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனவும்,இது குறித்து விவாதிக்க வேண்டும் எனவும் இதற்காக கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும் எனவும்கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், இதற்கு அனுமதி தர மறுத்த சபாநாயகர் பாலயோகி கேள்வி நேரத்தைத் தொடங்கப் போவதாகக்கூறினார். இதையடுத்து எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நினறு மத்திய அரசுக்கு எதிராக கோஷம்எழுப்பினர்.
உறுப்பினர்களை அமைதியப்படுத்த முயன்ற லோக்சபா சபாநாயகர் பாலயோகியின் முயற்சிகள்பலனளிக்கவில்லை. எதிர்க் கட்சி எம்.பிக்கள் அவையில் மையப் பகுதியில் கூட முயன்றபோது அதைப் படம்பிடித்துக் கொண்டிருந்த டி.வி கேமராக்களை உடனடியாக நிறுத்த பாலயோகி உத்தரவிட்டார்.
பின்னர் சபையை ஒரு மணி நேரம் ஒத்தி வைத்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications