சவப் பெட்டிகள் வாங்கியதில் கோடிக்கணக்கில் முறைகேடு
டெல்லி:
1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரை எதிர்கொள்ள ரூ. 2,163 கோடிக்கு அவசர அவசரமாக ஆயுதங்கள்வாங்கப்பட்டதில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளன. போரில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை எடுத்துச் செல்லஅலுமினிய சவப் பெட்டிகள் வாங்கியதில் கூட முறைகேடு நடந்துள்ளது.
இத் தகவலை நாட்டின் தலைமை கணக்கு அதிகாரியான கம்ப்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா(சி.ஏ.ஜி.) தெரிவித்துள்ளார். இவரது அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்துஎதிர்க் கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு அவைகளை ஒத்தி வைக்கச் செய்தன.
பாகிஸ்தான் ராணுவத்தினரும்- ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளும் இணைந்து இந்தியாவின் கார்கில் பகுதியில்ஊடுருவியதையடுத்து இந்திய ராணுவம் அவர்களை விரட்ட கடும் தாக்குதல் நடத்தியது.
கரடுமுரடான மலைப் பகுதியில் நடந்த இந்தப் போரில் நூற்றுக்கணக்கான இந்திய வீரர்கள் பலியாயினர்.தீவிரவாதிகளை அவர்கள் மறைந்திருந்த இடங்களில் புகுந்து தாக்கி விரட்டினர் இந்திய வீரர்கள்.
இந்தப் போரை எதிர்கொள்ள பல நாடுகளில் இருந்தும் அவசரமாக ஆயுதங்கள் வாங்கப்பட்டன. இது குறுத்துசி.ஏ.ஜி. வெளியிட்ட அறிக்கை விவரம்:
போரின்போது கிட்டத்தட்ட 123 ஆயுத பேரங்கள் நடந்தன. ஆயுதங்கள் வாங்க ரூ. 2,163 கோடிகள்செலவிடப்பட்டன. இதில் 35 ஆயுக பேரங்களில் முறைகேடுகள் நடந்து அரசுக்கு அனாவசியமாக 1,046 கோடிசெலவாகியுள்ளது.
போர் முடிந்த பின்னரும் கூட தொடர்ந்து போருக்குத் தேவையான ஆயுதங்கள் அவசரமாய் வாங்கிக்குவிக்கப்பட்டன. இதற்காக ரூ. 2,150 கோடி செலவிடப்பட்டது. போர் முடிந்த பின்னர் ரூ. 1,606 கோடிக்கு ஆயுதஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இதில் பல விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.
சவப் பெட்டி ஊழல்:
இந்த முறைகேடுகளில் சவப் பெட்டிகள் கூட தப்பவில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த பைர்ட்ரான் அண்ட் பிரைஸ்நிறுவனத்திடம் 500 அலுமினியம் சவப் பெட்டிகள், 3,000 பாடி பேக் எனப்படும் உடல்களை வைக்கும் பைகளுக்குஆர்டர் தரப்பட்டது. இதன் மதிப்பு 1.5 மில்லியன் (6.55 கோடி ரூபாய்).
ஒவ்வொரு அலுமினியப் பெட்டிக்கும் ரூ. 1.09 லட்சம் (2,500 டாலர்) வழங்கப்பட்டது. ஆனால், 5 ஆண்டுகளுக்குமுன் இதே பெட்டிகள் வெறும் 172 டாலருக்கு வாங்கப்பட்டன.
1.09 லட்சம் கொடுத்து பெட்டி வாங்குவது குறித்து எந்தவிதமான முன் அனுமதியும் பெறப்படவில்லை. விலையைக்குறைக்கவும் பேச்சு நடத்தப்படவில்லை. அவசரம் என்ற பெயரில் அமெரிக்க நிறுவனத்துக்கு பணத்தை அள்ளிக்கொடுத்திருக்கிறார்கள்.
அதே நேரத்தில் திடீரென அந்த நிறுவனம் இந்தப் பெட்டிகளின் எடையை 18 கிலோவிலிருந்து 55 கிலோவாகக்கூட்டப் போவதாகவும் இதனால் கூடுதல் பணம் தர வேண்டும் எனவும் இந்திய அரசிடம் கோரியது. இது குறித்துஅரசு விவாதித்துக் கொண்டிருந்தபோதே, 55 கிலோ கொண்ட 150 பெட்டிகள் டெல்லி வந்து இறங்கின. அரசும்உடனே அந்த நிறுவனத்துக்கு ரூ. 1.47 கோடி பணத்தை வழங்கியது.
ஆனால், அந்தப் பெட்டிகளை சோதனையிட்டபோது அவை உதவாதவை எனத் தெரியவந்தது. அதிக எடையுடன்இருந்ததால் அதைப் பயன்படுத்த முடியாது என ராணுவம் கூறிவிட்டது. மேலும், இந்தப் பெட்டிகளில் வெல்ட்வைக்கப்பட்டிருந்தது. மாறாக அவை மோல்ட் செய்யப்பட்டிருக்க வேண்டும். எனவே, அந்தப் பெட்டிகளைராணுவம் நிராகரித்துவிட்டது. ஆனால், பெட்டிகளுக்கு பாதுகாப்புத்துறை பணம் தந்துவிட்டது.
விமானங்களில் பயன்படுத்தும் அலுமினியத்தை பயன்படுத்தியுள்ளதாகவும் இதனால் தான் விலை கூடுதலாகஉள்ளதாகவும் கூறுகிறார்கள். ஆனால், இதே அலுமினியத்தை இந்தியாவின் ஹிந்துஸ்தான் விமான ஆராய்ச்சிநிறுவனம் கிட்டத்தட்ட 10 மடங்கு குறைவான விலைக்குத் தான் இறக்குமதி செய்து வருகிறது.
ஆகவே, சவப் பெட்டிகள் வாங்கியதில் பெரிய முறைகேடுகள் நிச்சயம் நடந்துள்ளன.
இவ்வாறு சி.ஏ.ஜி. தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்தச் செய்தி வெளியானதையடுத்து நாடு முழுவதுமே அதிர்ச்சி அலை பரவியுள்ளது.
இதன் மூலம் நாடும் நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களும் அவமதிக்கப்பட்டுள்ளனர். நாட்டுக்குள் ஊடுருவியதீவிரவாதிகளும் பாகிஸ்தானியர்களும் நமக்குச் செய்த தீங்கைவிட அதிகமான கெடுதலை நம் நாட்டு அதிகாரிகளேநமக்குச் செய்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications