இலங்கை தேர்தல் முடிவுகள்: புலிகள் மகிழ்ச்சி
கொழும்பு:
நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, இலங்கையில் அமைதி ஏற்பட சிங்கள மக்கள்விரும்புகிறார்கள் என்று தெரிவதாக தமிழ் விடுதலை புலிகள் கூறியுள்ளனர்.
இத் தேர்தலின் முடிவகளைப்பற்றி விடுதலை புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் எஸ்.பி.தமிழ்செல்வன்விடுதலைப்புலிகளுக்கான வானொலியில் கூறியதாவது,
சிங்கள மக்கள் இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும் என்பதற்காகவும், 18 வருட போரை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்பதற்காகவும் இந்த தேர்தலில் எதிர் கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.
புதிய அரசு தமிழர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று இந்த வாக்களிப்பின் மூலம்உணர்த்தியுள்ளனர். புதிய அரசு தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் அதற்கானவிளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
இவ்வாறு தமிழ்ச் செல்வன் கூறினார்.
புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு புலிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள முதல் கருத்து இது தான்.
புலிகளுடன் பேச்சு நடத்த புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தயாராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால், அதை அதிபராக உள்ள சந்திரிகா அனுமதிப்பாரா என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications