தமிழகம் முழுவதும் 2வது நாளாக கல்லூரி மாணவர்கள் போராட்டம்
சென்னை:
சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, இன்று (செவ்வாய்க்கிழமை) 2வது நாளாக தமிழகம்முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்றும் தேர்வுக்குப் போகாமல் போராட்டம் நடத்தினர். மேலும்அவர்கள் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையே போலீசார் தாக்குதலில் காயமடைந்து, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் அனைவரும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப் படி இன்று காலை சென்னை அரசுப்பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கோவையில் மாணவர்கள் உண்ணாவிரதம்...
இந்நிலையில் போலீசார் அராஜகத்தைக் கண்டித்து, கோயம்புத்தூர் சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று ஒருநாள்அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலில் சம்பந்தப்பட்ட போலீசாரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் மாணவர்களுக்குஎதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் கோரி அவர்கள்உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
சேலம், திருச்சி, மதுரையில்...
இதற்கிடையே சட்டக் கல்லூரி மாணவர்களைத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகோரி மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்றும் போராட்டம் நடத்தினர்.
இதேபோல் சேலம் மற்றும் திருச்சியிலும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாமக, முஸ்லீம் லீக் கண்டனம்...
இதற்கிடையே பாட்டாளி மக்கள் கட்சி, முஸ்லீம் லீக் போன்ற அரசியல் கட்சிகள் போலீசாரின் இந்த அராஜகச்செயலைக் கண்டித்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications