ரமேஷ் குடும்பம் தற்கொலை: கொலை வழக்காக மாற்றம்
சென்னை:
ரமேஷ் குடும்பம் தற்கொலை வழக்கை விசாரித்த போலீசார், காண்ட்ராக்டர் தெய்வசிகாமணியின் ஒப்புதல்வாக்குமூலத்தையடுத்து அதை கொலை வழக்காக மாற்ற முடிவு செய்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ரமேஷ் தன்குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்.
அவர்கள் அனைவரும் பூச்சி மருந்து சாப்பிட்டுத்தான் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால்பிரேத பரிசோதனையின்போது அவர்கள் உடம்பில் சயனைடு கலந்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பலரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மாநகராட்சி காண்ட்ராக்டர்தெய்வசிகாமணியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தார்சாலை அமைக்கும் பணியில் கமிஷன் பணம் கொடுக்காததால்தெய்வசிகாமணியை ரமேஷ் கடத்தி சென்றதாக கூறப்பட்டு வந்தது.
இதன் அடிப்படையில் போலீசார் கான்டிராக்டர் தெய்வசிகாமணியை கைது செய்து விசாரித்து வந்தனர். இன்று(செவ்வாய்க்கிழமை) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபதி ரவீந்திரன் முன்னிலையில் அவர்ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது தெய்வசிகாமணி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாகவும், பல திடுக்கிடும் தகவல்கள்வெளியானதாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
இந்த வாக்குமூலத்தையடுத்து ரமேஷ் தற்கொலை வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதாகப் போலீசார்தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பாக மேலும் சில பேர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகவும்போலீசார் கூறினர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications