http://tamil.oneindia.com/news/2001/12/11/reeta-1.html
செஞ்சி:
ரீட்டாவை கடத்திச் சென்று விபசார விடுதியில் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த ரீட்டா விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு செஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். அங்குரீட்டாவை கற்பழித்ததாக செஞ்சி சிறை வார்டன்கள் உள்பட 6 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக போலீஸ் சப் இன்ஸ்பெக்டர், பெண் போலீஸ் ஏட்டு, அரசு டாக்டர் தற்காலிகமாகபணி நீக்கம் செய்யப்பட்டனர்.
போலீசார் மேலும் விசாரணை செய்ததில், முதன் முதலாக ரீட்டாவைக் கடத்தி வந்தவர் சேலம் மாவட்டம்பொன்னேரியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் ஆனந்தராஜ் (27) என்பது தெரிய வந்தது. இதையடுத்துஅவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
ஆனந்தராஜுக்கும் ரேணுகா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. பின்னர் ரேணுகா அவனை விட்டுபிரிந்து சென்று வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து அவனுக்கு கேரளாவை சேர்ந்த விபசார தொழில் நடத்தும் ஒரு பெண்ணுடன் தொடர்புஏற்பட்டுள்ளது. அதனால் அவன் பெண்களைக் கடத்தி அந்தப் பெண்ணுக்கு சப்ளை செய்து வந்துள்ளான்.
இந்நிலையில்தான் கடந்த அக்டோபர் மாதம் ரீட்டா தனது அக்காவிடம் கோபித்து கொண்டு ஈரோடு பஸ்நிலையத்தில் நின்றிருந்தார்.
அங்கு அவருக்கு ஆசை வார்த்தை கூறி இழுத்துக் கொண்டு வந்த ஆனந்தராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில்முள்ளுவாடி கிராமத்தில் உள்ள விபசார விடுதி தலைவி ஈஸ்வரியிடம் அவளை ரூ.1,000க்கு விற்றுள்ளான்.
பின்னர் ஆனந்தராஜை செஞ்சி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். நீதிபதி செல்வகுமார் அவனை 15 நாள்காவலில் வைக்க உத்தரவிட்டார். பிறகு கடலூர் மத்திய சிறையில் அவன் அடைக்கப்பட்டான்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications