விபத்தில் இறந்த நடிகர் பாரி குடும்பத்துக்கு ரூ.6 லட்சம் நஷ்டஈடு
சென்னை:
சாலை விபத்தில் மரணமடைந்த நகைச்சுவை நடிகர் பாரி வெங்கட் குடும்பத்துக்கு ரூ.6 லட்சம் நஷ்டஈடு வழங்கவேண்டும் என்று இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு "லோக் அதாலத்" நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் டவுசர் பாண்டி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதைகொள்ளை கொண்டவர் பாரி வெங்கட். இந்த படத்திற்கு பின் அவருக்கு பல படங்கள் ஒப்பந்தமாகின.
இவர் 1999ம் ஆண்டு பெரம்பலூர் அருகே உள்ள மங்களமேடு என்னுமிடத்தில் ஏற்பட்ட விபத்தில்மரணமடைந்தார். அடையாளம் தெரியாததால் அவரது பிணத்தை போலீசாரே புதைத்து விட்டனர்.
பின்னர் உண்மை தெரிந்த அவரது குடும்பத்தினர் பிணத்தை மீட்டு, முறைப்படி இறுதிச் சடங்கு நடத்தினர்.
இதையடுத்து, பாரிவெங்கட் குடும்பத்தினர் சென்னை மோட்டார் வாகன விபத்துகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில்வழக்கு தொடர்ந்தனர். வெகு நாட்களாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு கடந்த 7ம் தேதி "லோக் அதாலத்"எனப்படும் மக்கள் கோர்ட் முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த "லோக் அதாலத்", மறைந்த பாரிவெங்கட் குடும்பத்திற்கு இந்த விபத்திற்குக் காரணமாகஇருந்த வாகனத்தைப் பதிவு செய்துள்ள இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.6 லட்சம் நஷ்டஈடு வழங்கும்படி உத்தரவிட்டது.
-
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications