நாடாளுமன்றத்தில் 2வது நாளாக அமளி
டெல்லி:
கார்கில் போரில் உயிரிழந்தவர்களுக்காக சவப்பெட்டி வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதையடுத்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்றும்(புதன்கிழமை) அமளியில் ஈடுபட்டனர்.
கடந்த 1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை எடுத்துச் செல்ல அலுமினிய சவப்பெட்டிகள் வாங்கியதில் கூட முறைகேடு நடந்துள்ளது என்று நாட்டின் தலைமை கணக்கு அதிகாரியான கம்ப்ரோலர்அண்ட் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா (சி.ஏ.ஜி.) தெரிவித்துள்ளார்.
இவரது அறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து எதிர்க் கட்சிகள் கடும்அமளியில் ஈடுபட்டு அவைகளை ஒத்தி வைக்கச் செய்தன.
இந்நிலையில் இன்றும் மக்களவையில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால்நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்றும் பாதிக்கப்பட்டன.
மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் பெரும் அமளி செய்தனர். பெர்னாண்டஸ் உடனடியாக ராஜினாமாசெய்யவேண்டும் என்று எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் இன்றும் ஒத்திவைக்கப்பட்டன.
பெர்னாண்டசை நீக்க மார்க்சிஸ்ட் கோரிக்கை:
இதற்கிடையே பெர்னாண்டசைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவலியுறுத்தியுள்ளது.
"இந்தியாவிலேயே எளிதாக சவப் பெட்டிகள் தயாரிக்க முடியும் என்னும் நிலையில் அமெரிக்காவிலிருந்துஅவற்றை இறக்குமதி செய்தது ஏற்றுக் கொள்ள முடியாதது.
பாதுகாப்புத் துறை அமைச்சராக இருப்பதற்கு பெர்னாண்டஸ் கொஞ்சம் கூடத் தகுதியற்றவர். இதனால் அவரைஉடனடியாக நீக்க வேண்டும்" என்று அக்கட்சியின் பொலிட்-பீரோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications