மதுரை பெட்ரோல் பங்க்கில் ரூ.ஒன்றரை லட்சம் கொள்ளை
மதுரை:
மதுரையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் துப்பாக்கி முனையில் ரூ.ஒன்றரை லட்சத்தைக் கொள்ளையடித்துச்சென்ற 3 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மதுரை-மேலூர் சாலையில் ஒத்தக்கடை அருகே ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பெட்ரோல் பங்க் 24 மணிநேரமும் சுறுசுறுப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஒரு பைக்கில் வந்த மூன்று பேர், அந்த பைக்கிற்கு பெட்ரோல் போடுமாறுகூறினர்.
பின்னர் திடீரென்று அவர்களில் ஒருவர் திடீரென்று மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து வானைநோக்கி இரண்டு ரவுண்டு சுட்டார்கள்.
பின்னர் பெட்ரோல் பங்க்கின் கேஷியரிடம் சென்று, துப்பாக்கியையும் கத்தியையும் காட்டி மிரட்டிய அந்த மூன்றுபேரும் அவரிடமிருந்த பணத்தைப் பிடுங்கிக் கொண்டு பைக்கில் ஏறிப் பறந்தனர்.
சுமார் ரூ.ஒன்றரை லட்சம் வரை பணம் பறிபோயுள்ளதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து போலீசார் புலன் விசாரணை நடத்தி, சந்தேகத்தின்பேரில் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.மற்றவர்களையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிமாகவுள்ள பகுதியில் இந்தத் துணிகரக் கொள்ளை நடந்திருப்பதால், இச்சம்பவம் மதுரைநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications